Home
Choosing web hosting is always a challenge, please consider this hostmonster review and greengeeks review.

About the Library

சேலம் மாவட்ட மைய நூலகம் 06.08.1953-ல் துவங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து புதிய கட்டிடம் கடந்த 23.9.1981-ல் அரசினர் ஆண்கள் கலைக்கல்லூரி அருகில் புதிதாக இரண்டு அடிக்குகள் கொண்டதாக கட்டிமுடிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. மேலும் இம்மாவட்ட மைய நூலகம் சேலம் மாநகரின் மையப் பகுதியில் அமைந்து செயல்பட்டு வருகிறது. இந்நூலகத்தில் மொத்த நூல்கள் 140156    உள்ளது. மேலும் வருடவருடம் பொது நிதியிலும் இராசாராம் மோகன்ராய் அறக்கட்டளை நிதியுதவிடன் 5000 முதல் 7000 வரை புதிய நூல்கள் வாங்கி மைய நூலக வாசகப் பயன்பாட்டிற்கு வழங்கி வருகிறோம். இந்நூலகத்தில் உறுப்பினர்கள் 09-09-2010 வரை 52632 உறுப்பினர்கள் உள்ளனர். மிக பழமை வாய்ந்த நூல்கள் மாவட்ட மைய நூல்கத்தில் வைக்கப்பட்டுள்ளன.

கடந்த 2009ம் ஆண்டு நூலக வார விழா கொண்டாடிய போது மாவட்ட மைய நூலகம் அமைந்த சேரராசன் சாலை இனி வரும் காலத்தில் மைய நூலக சாலை என அழைக்கப்படும் என மாண்புமிகு வேளாண்மைத்துறை அமைச்சர் அவர்கள் சிறப்புரையாற்றும்போது தெரிவித்தாள்ளார். மேலும் இந்நூலகத்தில் தினந்தோறும் 500 வாசகர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

தினந்தோறும் 200 நூல்களுக்கு குறையாமல் நூலக வாசகர்களுக்கு நூல் இரவல் வழங்கப்பட்டு வருகிறது. இந்நூலகத்தில் மாற்றுத்திறனாளியான (பார்வையற்றோருக்கு) பேசும் நூலகம் என்ற அமைப்பு தமிழ்நாட்டிலேயே முதல்முறையாக கடந்த 2007ம் ஆண்டு துவங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நூலகத்தில் அகண்ட அலைவரிசை ஏற்படுத்தப்பட்டு நூலக வாசக பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் கணினி அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் குடிமைப்பணி மையம் இந்நூலகத்தில் காலை 8.00 மணி முதல் மாலை 8.00 மணி வரை இடைவெளியின்றி செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

மாவட்ட மைய நூலக முகவரி
மாவட்ட மைய நூலகம்
சேரராசன் சாலை
அரசினர் கலைக்கல்லூரி அருகில்
அஸ்தம்பட்டி அஞ்சல்
சேலம் - 636 007
 
OPAC

CHAT